ஜெர்மனியில் புதிய பிரச்சினை! அதிகரித்துள்ள வீடுகளுக்கான பற்றாக்குறை
ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
குறிப்பாக ஜெர்மனியின் முக்கிய நகரங்களான பெர்லின் மற்றும் முனிச் ஆகிய நகரங்களில் இந்த வீடு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 2.56 மில்லியன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
மோசமடையும் நிலை
இதன்படி, ஒரு ஆண்டுக்கு குறைந்தது 320,000 புதிய வீடுகள் வீதம் கட்டப்பட வேண்டும்.
இவ்வாறிருக்க, 2023 இல், ஜெர்மனி முழுவதும் சுமார் 294,400 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
புதிய வீடுகள் விரைவில் கட்டப்படாவிட்டால், ஜெர்மனியில் வீடு பற்றாக்குறை தொடர்ந்தும் மோசமடையும் என்பதோடு குறைந்த விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 7 மணி நேரம் முன்

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
