வெளிநாட்டவர்களுக்கு ஜேர்மனி வழங்கியுள்ள வாய்ப்பு
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலபகுதியில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளதாக ஜேர்மன் (Germany) வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 40,000 விசாக்கள் அதிக திறன் கொண்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 3,000 அதிகமாகும்.
பணி வெற்றிடங்கள்
கடந்த ஆண்டில் 570,000 பணி வெற்றிடங்கள் ஜேர்மனியில் இருந்ததாக, ஜேர்மன் பொருளாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, தற்போது போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அது நாட்டின் பொருளாதாரத்தின் மீது தொடர்ந்து தாக்கம் செலுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த துறைகளுக்கு தகுதியுடையோருக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
