பிரித்தானிய பயணம் குறித்து பல நாடுகளில் எச்சரிக்கை
பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் காரணமாக அங்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றது என பல நாடுகள் தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதற்கமைய, நைஜீரியா, மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பிரித்தானிய பயணம் குறித்து மக்களை எச்சரித்துள்ளன.
அதேவேளை, பிரித்தானியாவில் தற்போது வசித்து வரும் மற்றும் அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ள மக்களையும் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் குறித்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
வலதுசாரி போராட்டங்கள்
இந்நிலையில், பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது குறித்து அண்மையிலேயே இந்தியா எச்சரித்துள்ளதுடன், லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், "பிரித்தானியாவில் பயணம் செய்யும் போது விழிப்புடன் இருக்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும்" என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரங்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் தீவிர வலதுசாரி போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே கலவரங்கள் என அந்நாட்டின் நிலைமை மிக மோசமடைந்தது.
இந்நிலையில், பிற நாடுகள் தமது குடிமக்கள் அங்கு செல்வதனையும், வசிப்பதனையும் எச்சரித்துள்ளமை பிரித்தானியாவின் தீவிர நிலைமையை நன்கு வெளிப்படுத்துகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |