பங்களாதேஷின் இடைக்கால பிரதமராக பதவியேற்கும் யூனுஸ்
பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் இன்றைய தினம் (08) பதவியேற்க உள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அந்நாட்டு இராணுவம் அரசினை பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது, பங்களாதேஷின் இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் பதவியேற்கவுள்ளார்.
யூனுஸின் கோரிக்கை
இதற்கமைய, அவர் இன்று இரவு 8 மணியளவில் பதவியேற்கவுள்ளதாக பங்களாதேஷ் இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர் - உஸ் - ஜமான் நேற்று (07) அறிவித்துள்ளார்.
பெரும்பாலும் மாணவர்களால் வழிநடத்தப்பட்ட ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் நாட்டின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு முஹம்மது யூனுஸும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், யூனுஸ், வன்முறைகளையும் போராட்டங்களையும் விடுத்து கோரிக்கை முன்வைக்குமாறும் அமைதியான முறையில் ஆட்சி நடத்த வழிவகுக்குமாறும் மக்களிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
