ஷேக் ஹசீனாவின் அமெரிக்கா விசா ரத்து
ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
குறித்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் உள்ளார்.
தற்காலிகமாக குடியேற அனுமதி
இந்நிலையில் அவர் லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது.
எனினும், முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |