தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் (Video)
ஜெனிவா விவகாரம் மற்றும் பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியிருந்தது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (18.09.2022) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் தற்போதைய போக்கு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம்
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், கலையரசன்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும்,
கட்சியின் செயலாளருமான ப.சத்தியலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின்
மத்தியகுழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri