ஜெனிவா சென்றுள்ள பிரதிநிதிகள் நாளொன்றுக்கு செலவிடும் பெருந்தொகை பணம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய இராச்சியத்தால் கையளிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான புதிய ஆறு பக்க வரைவுத் தீர்மானம், 2009ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் மிகவும் வலுவான தீர்மானமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவற்றால் இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
ஆலோசனைகளுக்கு பின்னர் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், மனித உரிமைகள் செயலகத்தால் இது, தீர்மானம் 51-1 என்று பெயரிடப்படும்.
இந்த புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் அக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற உள்ளது.
இலங்கை பிரதிநிதிகள்
இந்தநிலையில், இந்த அமர்வுகளுக்காக இலங்கையின் பிரதிநிதிகள் எவ்வளவு பணத்தை செலவிடுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தடவை ஜெனிவாவில்; உள்ள இண்டர்கொண்டினென்டல் ஹோட்டலில் இலங்கை பிரதிநிதிகள் தங்கினர்,
இந்த ஹோட்டலில் உள்ள ஒரு உன்னதமான அறைக்கு காலை உணவு இல்லாமல் ஒரு நாளுக்கான செலவு, சுவிஸ் ஃபிராங்க்ஸ் 563 ஆகும்.
அதாவது ஒரு நாளைக்கு 586 அமெரிக்க டொலர்கள் அல்லது இலங்கையின் ரூபா பெறுமதியில் இரண்டு லட்சத்துக்கு 10ஆயிரத்து 301 ரூபாவாக இருக்கும்.
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஜெனிவாவும் ஒன்று என்பதும், திவால்
என்று அறிவித்துள்ள அந்நியச் செலாவணியில் சிக்கியுள்ள இலங்கை அரசாங்கம்,
அவ்வப்போது மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு
ஒதுக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
