க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் பரீட்சைக்கு தேவையான ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம், பரீட்சை அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதர பரீட்சை தொடர்பில் இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் நாளைய தினம் பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும்.
தேவையற்ற பொருட்களை பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இதனை மீறும் பட்சத்தில் பரீட்சை குற்றமாக கருதி அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி 05 வருடங்களுக்கு பரீட்சை தடை விதிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
