பூதாகரமாகும் பட்டலந்த அறிக்கை! நாட்டு மக்களுக்கு இன்று ரணில் சொல்லப் போகும் செய்தி
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட உரை
கடந்த வாரம், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை
இதேவேளை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டலந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.





15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
