இலங்கையில் சிக்கிய பெண்கள் உட்பட 76 வெளிநாட்டவர்கள் - நாடு கடத்த நடவடிக்கை
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் இன்று பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சுற்றுலா விசாக்கள் மற்றும் வணிக விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்தவர்கள் எனவும் அவர்களில் 36 பேரின் விசாக்கள் காலாவதியாகியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
விசா நிபந்தனை
மீதமுள்ள 40 இந்தோனேசிய பிரரைஜகள் விசா நிபந்தனைகளை மீறி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களில் 6 பேர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பிரஜைகள் குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் சமிந்த பத்திராஜாவின் அறிவுறுத்தல்களுக்கமைய, தற்போது வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை விரைவில் நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.