உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி வர்த்தமானியில் இன்னமும் வெளிவரவில்லை:ஜோதிலிங்கம்
உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆனால் வர்த்தமானியில் அது இன்னமும் வெளிவரவில்லை என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நேற்று(27.01.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தலுக்கான தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆனால் வர்த்தமானியில் அது இன்னமும் வெளிவரவில்லை.
உள்ளூராட்சி சபைகளை கலைத்தல்
பொதுவாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவிக்கும் போது அந்த உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டதாக இருக்கும். இந்த தடவை அந்த கலைப்பு என்பது இடம்பெறவில்லை.
இவ்வாறு சபைகள் கலைக்கப்படாமல் இருப்பதன் காரணமாக தவிசாளர்களும் உறுப்பினர்களும் உள்ளூராட்சி வளங்களை துஷ்பிரயோகம் செய்கின்ற நிலைமை எல்லா இடத்திலும் காணப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலுக்குரிய பிரச்சாரத்திற்கு தவிசாளர்களுடைய வாகனங்கள் ஓடித்திரிவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த செயற்பாடுகள் தேர்தலின் மகிமையை மிகவும் பாதிக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.
இப்படி ஒரு தேர்தலை நடாத்துவதை விட நடாத்தாமல் விடுவதே நல்லது என்பது எனது அபிப்பிராயம்.
இவ்வாறு ஒரு நிலைமை வருவதற்கு, அரசாங்கம் தேர்தலை நடாத்துவதில்லை என்ற முடிவுடன் இருப்பதும் காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் அரசாங்கத்தை பொறுத்தவரை தேர்தலை நடாத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
ஏனெனில் நடக்கவுள்ள தேர்தல் மொட்டுக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
அந்த காரணங்களுக்காக தேர்தல் நடைபெறாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகள் நடைபெற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அவர்கள் சபையை கலைக்காகமல் விட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
இதைவிட மொட்டுக் கட்சியின் பலத்தில் உள்ளூர் சபைகளும் ஒன்று.
பதவியில் தொடர்ந்து இருத்தல்
ஆகவே உள்ளூராட்சி சபைகளில் இருப்பவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வைக்க வேண்டும் என்றால் அவர்கள் அந்த பதவியில் தொடர்ந்து இருப்பது அவர்களைப் பொறுத்தவரையில் அவசியமாக உள்ளது.
இதற்காகவும் உள்ளூராட்சி சபைகளை கலைக்காமல் விட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
ஒரு தேர்தலை நடாத்துவதாக இருந்தால் இந்த நிலை ஆரோக்கியமானது அல்ல.
ஒப்பீட்டு
ரீதியில் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல் நீதியாக, ஜனநாயக ரீதியில் நடைபெறும்
தேர்தல் என்ற ஒரு பெயர் உலகளவில் உள்ளது. அந்த பெயர் மங்குவதற்கான சூழலும்
ஏற்படலாம் என நான் நினைக்கிறேன்.”என கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 59 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
