இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கெளதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பிரதம பயிற்றுவிப்பாளரான ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் (Gautam Gambhir) புதிய பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் (IPL) தொடரில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (KKR) அணி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
கொல்கத்தா அணியின் வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் கெளதம் கம்பீரின் வழிகாட்டுதலும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த பயிற்றுவிப்பாளருக்கான போட்டி
இந்நிலையிலேயே, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கம்பீர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்திய அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளருக்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் முன்னாள் சிம்பாப்வே வீரர் அண்டி பிலௌர் ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
எனினும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக சிறப்பாக செயற்பட்டமையினால் கம்பீர் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |