கல்முனையில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை
அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அத்துடன் உள் வீதிகளில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி மாடுகள், நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன் வீதியில் செல்பவர்களை தெரு நாய்கள் கடிக்க வருவதும் இடம்பெறுகின்றன.
இதன் காரணமாக, வீதியில் பயணம் செய்வோர் விழுந்து காயங்களுக்குள்ளாகின்றனர்.
வீதி விபத்துக்கள்
மேலும், வீதிகள் கடற்கரை பகுதிகளில் கொட்டப்படும் விலங்கு எச்ச கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதுடன் தற்போது 20க்கும் மேற்பட்ட நாய்கள் கட்டாக்காலிகளாக உலாவி கழிவுகளை உண்பதற்காக வெளியிடங்களில் இருந்து உட்பிரவேசிக்கின்றன.
மேலும் இப்பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு பகல் பாராது மேற்படி கட்டாக்காலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
உரிய நடவடிக்கை
குறிப்பாக கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதினாலும் வீதிகளில் கூட்டமாக கிடப்பதினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.
எனவே, கட்டாக்காலி மாடுகள், நாய்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி மக்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
