வாகன இறக்குமதியில் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கான சலுகை
வாகன இறக்குமதிக்கான அனுமதியை பெறுவதற்கு 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெற்ற அரசு மற்றும் நீதித்துறை உயர் அதிகாரிகளும் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"2022இல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய ஓய்வு வயதை 60ஆகக் குறைத்ததற்கமைய 60 வயதை நிறைவு செய்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் வாகன அனுமதி பெறத் தகுதியுடையவர்கள்.
அமைச்சரவையின் தீர்மானம்
அது மாத்திரமன்றி, நீடிப்பு இல்லாமல் கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்டவர்களும் சலுகை கட்டண விகிதங்களின் கீழ் அனுமதி பெறலாம்.
மேலும், கடந்த மார்ச் 11ஆம் திகதியன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்தே ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதி அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
