மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு வெற்றிடங்கள்! நால்வரின் பெயர்கள் பரிந்துரை
தற்போதைக்கு விடுமுறையில் இருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி 63 வயது பூர்த்தியாவதன் காரணமாக பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக இருக்கும் நீதியரசர் லபார் தாஹிரும் ஜூன் மாதம் 18ஆம் திகதியுடன் 63 வயதைப் பூர்த்தி செய்து பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த இரண்டு வெற்றிடங்களையும் நிரப்ப ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நான்கு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம்
உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிராங்க் குணவர்தன, ஆதித்ய குமார பட்டபெந்தி மற்றும் நவரட்ண மாரசிங்க ஆகியோரின் பெயர்களை பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இரண்டு சந்தர்ப்பங்களில் முன்மொழிந்துள்ளார்.
இதற்கிடையில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, துணை சொலிசிட்டர் ஜெனரல் ரியாஸ் பாரியின் பெயரை முன்மொழிந்துள்ளார்.
குறித்த நான்கு பேரில் இரண்டு பேரின் பெயர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துக்காக பரிந்துரைக்க உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
