ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜப்பானுக்கு விளக்கமளித்துள்ள சஜித் பிரேமதாச
தற்போதைய "ஊழல் மற்றும் இரக்கமற்ற" ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜப்பானுக்கு (Japan) விளக்கியுள்ளார்.
சஜித் பிரேமதாச, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை (Yōko Kamikawa) நேற்று (05.05.2024) சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட நிலையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
குறித்த சந்திப்பில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கமிகாவாவிடம் சஜித் விளக்கியுள்ளதோடு தமது கட்சியின் திட்டங்களையும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இலங்கை அரசியலில் இந்த வருடத்தில் தேர்தலின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய ஊழல் மற்றும் இரக்கமற்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் நேசமான நிர்வாகத்தை ஸ்தாபித்ததன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு நாட்டை புத்துயிர் பெறுவதற்கான திட்டங்களை கொண்டுள்ளது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |