மட்டக்களப்பில் மின்பிறப்பாக்கிகளின் செம்பு கம்பிகள் திருட்டு: இருவர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) நகர்பகுதிகளிலுள்ள மின்பிறப்பாக்கிகளின் செம்பு கம்பிகளை திருடிவந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவர் வழங்கிய தகவலுக்கமையவே, நேற்றையதினம் (04.05.2024) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியிலுள்ள மின்சார சபையின் மின்சார பிறப்பாக்கிகளில் பொருத்தப்பட்டிருந்த செம்பு கம்பிகள் கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு இளைஞர்கள் கைது
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் குத்துவிளக்குகள் மற்றும் பிறப்பாக்கிகளின் செம்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளன.
அதனையடுத்து, இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணையில், திராய்மடு பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து, அதில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதவான் உத்தரவு
அத்துடன், திருடப்பட்ட செம்பு கம்பிகள், ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பழைய இரும்பு விற்பனை கடை ஒன்றிலிருந்து உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
