ஜனாதிபதி செயலாளருக்கும் கேட்ஸ் மன்ற ஆலோசகருக்கும் இடையே முக்கிய சந்திப்பு
கேட்ஸ் அறக்கட்டளையின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க (Chanditha Samaranayake) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சற்திப்பானது நேற்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு
சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் விவசாய மாற்றத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ), கால்நடை வளர்ப்பு மற்றும் காலநிலை முன்முயற்சிகள் மீதான ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை முறைப்படுத்துவதற்கு விரைவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நம்புவதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
