சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை
தன்னை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறீதரன் மதுபான சாலை உரிமங்களை பெற்றுக்கொண்டதாக முகநுால் மற்றும் டிக்டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறுக்கமான நிலைப்பாட்டில் சிறீதரன்
பொலிஸார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மற்றுமொரு நபர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டதாகவும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறி சிறீதரனிடம் தொலைபேசி ஊடாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால், சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால் இந்த விடயத்தை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |