பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து எரிவாயு விநியோகம்:நீண்ட நேரம் வரிசையில் நின்று மயங்கி விழுந்த நபர்
பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து எரிவாயு விநியோகம் - நீண்ட நேரம் வரிசையில் நின்று மயங்கி விழுந்த நபர் நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காண முடிகிறது.
இவ்வாறான நிலைமையில், அம்பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் நின்றுள்ளனர்.
இதன் காரணமாக லிற்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களை ஏற்றி வந்த சுமை ஊர்தியை அம்பாலங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்று அங்கிருந்தவாறு எரிவாயு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வரிசையில் நின்றதன் காரணமாக ஒருவர் மயங்கி தரையில் விழுந்துள்ளார். இதனையடுத்து, அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து பொலிஸார் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அண்மைய காலமாக சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையில் நிற்கும் இடையில் மோதலான நிலைமைகள் அதிகரித்து வருவதால், எரிவாயு விநியோகத்தின் போது பொலிஸாரின் விற்பனையாளர்கள் பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.