லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து அதன் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்
வட் வரி அதிகரிக்கப்படாவிட்டால் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அரசாங்கம் 685 ரூபாவால் குறைத்திருக்கும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வட் வரி விதிப்பு இல்லாத நிலையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரை 3,700 ரூபாவிற்கு விற்கும் சாத்தியம் இருந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விலை சீர்திருத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எங்கள் விலையை அதிகரிக்கவில்லை. இருப்பினும் வட் வரியை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு விலை சீர்திருத்தத்தை தூண்டியுள்ளது.
எரிவாயு மீதான வட் விதிப்பு பொருத்தமற்றது மற்றும் சமையல் எரிவாயு மீது முன்பு வட் வரி விதிக்கப்படவில்லை.
சமையல் எரிவாயு மீது வட் வரி விதிக்கும் முடிவானது விலையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
