இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அநுர அரசு அச்சத்தில்!
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக வெளிப்படுத்தப்படும் பிரிக்கேடியர் லலித் ஹேவாவை தற்போதைய அரசாங்கம் கைது செய்யும் நோக்கத்தில் இல்லை என ரெலோ பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவரை கைது செய்ய விருப்பம் இல்லாத அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை நோக்கி நகருமா என்கின்ற சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈழத்தமிழர்கள் சார்பிலே நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கான நீதியில் தற்போதைய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை எனவும் ரெலோ பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



