தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அமைச்சர் கரி ஆனந்தசங்கரி
கனடாவின் (Canada) கியூபெக்கில் இளம் தலைமுறை தமிழர்களின் மும்மொழி ஆளுமை என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, கனடாவுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது என முடிக்குரிய பூர்வீகக் குடிகள் உறவுகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு அபிவிருத்திக்கான கனேடிய நிறுவனங்களுக்கான அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி கியூபெக்கின் மொன்ரியல் லவால் நகரில் கியூபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எட்டாவது தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ஆனந்தசங்கரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழி தகைமையுடன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு இந்த இளந்தலைமுறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள்
இந்த நிகழ்வில் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், பொது சேவைகள் அமைச்சர் ஜோன்-யீவ் டுக்ளோ, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் எல்-கூரி, அனி கூர்டாகிஸ் மற்றும் சமீர் சுபேரி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், முதல்முறையாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மார்க் மில்லர் ஜோன்-யீவ் டுக்ளோ ஆகியோருக்கு அமைச்சர் ஆனந்தசங்கரி நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டில் முதன்முறையாக கனடாவில், மொன்ரியல் நகரில் வந்து தாம் குடியேறியமையை நினைவுகூர்ந்த அமைச்சர் ஆனந்தசங்கரி, கியூபெக்கில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பிரமாண்டமாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வை நடாத்துவதனையும் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டு தமிழ் மரபுத் திங்களின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கலந்து கொண்டு சிறப்பித்தமையையும், இவ்வருடம் வருவதற்கான முயற்சி கைகூடாத நிலையில், கனேடியத் தமிழ் மக்களின் சார்பில் சர்வேதச நீதிக்காக அவரது ஒத்துழைப்புக்காக அனைவர் சார்பிலும் நன்றி தெரிவிக்க தமக்கு சந்தரப்பம் கிடைத்தமையையும் அமைச்சர் ஆனந்தசங்கரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |