கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து விழுந்த அதிகாரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, இராஜதந்திரி ஒருவர் நடமாடும் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயன்படுத்தும் இந்த நடமாடும் படிக்கட்டுகள் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை தெரியவந்துள்ளது.
பழைய படிக்கட்டு
அதற்கமைய, நீண்ட காலமாக இந்த இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்யவில்லை எனவும் பழைய இயந்திரங்களை தொடர்ந்தும் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விமானம் வரும்போது பயணிகள் இறங்குவதற்கு ஒவ்வொரு வாசலிலும் இரண்டு நடமாடும் படிக்கட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
எனினும் பெரும்பாலும் ஒரு படிக்கட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறங்குவதற்கு பாரிய நேரம் எடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
