போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுண உறுப்பினர் கைது
கம்பளை நகர சபையின் பொதுஜன பெரமுண கட்சி சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சி சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளுடன் கம்பளை நகர சபைக்குத் தெரிவான உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர் கைது
குறித்த நபர் மீது இதற்கு முன்னரும் சட்டவிரோதமாக காய்ச்சியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்றைய தினம்(27) கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 8 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
