யாழ். அச்சுவேலியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் : பொலிஸ் விசாரணை தீவிரம்
யாழ்ப்பாணம்(Jaffna) - அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பகுதியில் உள்ள பண்ணையொன்றில் பெருமளவானவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று(02.06.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக வந்தவர்கள் பண்ணையில் உள்ள வீட்டில் பெருமளவு சேதங்களை ஏற்படுத்தி தீவைத்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதல்
குறித்த பண்ணைக்கு வந்த சிலர் அங்கு நின்ற ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு முன் பகை காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri