வாக்களிப்பு பின்னரான கருத்துக்கணிப்பானது மோடி ஊடகத்தின் கற்பனை : ராகுல் காந்தி விமர்சனம்
இந்தியாவில் நேற்று வெளியான வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்புகளை காங்கிரஸின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
வெளியான கருத்துக்கணிப்பு
இதன்போது அவர் தெரிவித்ததாவது, வெளியான கருத்துக்கணிப்பு உண்மையான கருத்துக்கணிப்பு அல்ல. அது மோடியின் ஊடகத்தின் கருத்துக்கணிப்பு என்றும், கற்பனை கருத்துக்கணிப்பு என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | Congress leader Rahul Gandhi says, "It is not exit poll, it is Modi media poll. It is his fantasy poll."
— ANI (@ANI) June 2, 2024
When asked about the number of seats for INDIA alliance, he says, "Have you heard Sidhu Moose Wala's song 295? 295." pic.twitter.com/YLRYfM4xwW
இந்தநிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எத்தனை ஆசனங்களை பெறும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது சிது மூஸ் வலாஸின் பாடலை 295 ஐ(sidhu moose wala) கேட்டிருக்கிறீர்களா? என்று ராகுல் செய்தியாளர்களிடம் வினவியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியா கூட்டணி; 295 க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறும் என்று கூறியிருந்ததையே ராகுல் காந்தி, இதன்போது குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |