விஞ்ஞான பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் முன்னிலை
வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முன்னிலை சித்திகளை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் நான்கு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் 1,2,3,5 ஆம் நிலைகளை பெற்றுள்ளனர்.
மாவட்ட நிலை
அத்துடன் 8 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் 20ஆம் நிலைக்குள் சித்தியடைந்தனர். வர்த்தக பிரிவில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் ஒரு மாணவி மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன் 4 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 ஆம் நிலைக்குள் சித்தி பெற்றுள்ளனர். கணித பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 5ஆம் இடத்தினை தக்கவைத்துள்ளார்.

அத்துடன் 6 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் 20ஆம் நிலைக்குள் சித்தியடைந்தனர். கலைப்பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று மாவட்டமட்டத்தில் 23 ஆம் நிலையினை அடைந்துள்ளார். தொழில்நுட்ப பாடத்தில் மாவட்ட மட்டத்தில் 9ஆம் நிலையினை ஒரு மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
அமெரிக்க தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரும் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உறுதி News Lankasri