தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள சுவிற்சர்லாந்து பிரஜை
சுவிற்சர்லாந்து நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.
சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்றுவருகின்றார்.
தமிழ்க் கல்விச்சேவை
வளர்நிலை ஒன்றில்(ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார்.

மேலும் இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல், வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த நாடுகளில் பிற இனத்தாருக்கும் தமிழ்கற்பித்த தமிழ்ப்பள்ளி என்ற பெருமைக்குரிய பள்ளியாக சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி திகழ்கின்றது.
இதற்கு முன்னரும் நான்கு பிற இனச்சிறார்கள் கற்றுச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam