செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் முன்கூட்டியே அறிந்திருந்த ரகசியம் - பொலிஸார் தகவல்
கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அவர் நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடிய அனைத்து கடல் வழிகள் மற்றும் விமான நிலைய வழிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா , கடுவெல பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொலைக்குத் தேவையான துப்பாக்கியை, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கியுள்ளார்.
தொலைபேசி உரையாடல்
இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில், சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரருக்கும் இந்தக் கொலை குறித்துத் தெரியும் எனவும், அதற்கு முன்னர் அவர்கள் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரரை குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று இரவு கைது செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபரான இஷார செவ்வந்தி, ஹெராயின் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri
