சஞ்சீவவின் கொலை : சந்தேகநபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சந்தேக நபரின் காதுகளைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டி, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கோரியுள்ளார்.
நேற்றைய நீதிமன்ற அமர்வின் போது, தனது வாடிக்கையாளருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தேவையான மருத்துவ சிகிச்சை
எனினும், அது பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடைமுறைப்படுத்தலிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முறையான பொலிஸ் வழிகள் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சட்டத்தரணி, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 18 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
