கைது செய்வதைத் தடுக்க கோரும் கம்மன்பிலவின் மனு விசாரணைக்கு...!
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனு தாக்கல்
மனுதாரர் சார்பாக நேற்று முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவின் கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
எனினும், உதய கம்மன்பிலவைக் கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
