சரி செய்யுங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள்...! பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை
தொடருந்து துறையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்,
தொடருந்து சேவைகளின் சரியான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறுபவர்கள் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, தொடருந்து பெட்டிகளின் மோசமான நிலையை விமர்சித்துள்ளார்.
யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால்
குறிப்பாக காலி மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் முக்கிய அலுவலக தொடருந்துகளில் உடைந்த ஜன்னல்கள், செயல்படாத மின்விசிறிகள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஒரு சிறுவன் தனது முதல் தொடருந்து பயணத்தின் போது ஒரு பழுதடைந்த ஜன்னலில் இருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்த ஒரு துயர சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடருந்துகள் உழைக்கும் மக்களுக்கானவை. இவ்வளவு மோசமான சேவையை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?
குறிப்பாக ஒரு மாதத்திற்குள் கழிப்பறைகள், ஜன்னல்கள், மின்விசிறிகள் போன்றவற்றில் தெளிவான பழுதுபார்ப்புகளைக் காண விரும்புகிறேன்.
அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால், வெளியேறுங்கள். இது இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri