உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: அரசாங்கத்துடன் மீண்டும் மோதும் கம்மன்பில
பிவித்துருஹெல உறுமய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜனாதிபதி செயலக தகவல் அதிகாரியிடம் எழுத்து மூல தகவல்களை கோரியுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஏ.என்.ஜே டி அல்விஸ் தலைமையிலான குழு முன் வழங்கிய சாட்சிய பதிவுகளை தமக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவலறியும் உரிமைச்சட்டம்
அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக ரவி செனவிரத்ன பதவி வகித்தார்.

இந்தநிலையில், உளவுத்துறை எச்சரிக்கை கடிதம் கிடைத்து 12 நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தவறிழைத்ததாக குழுவின் முன் அவர் ஒப்புக்கொண்டதாக நம்பத்தகுந்த முறையில் அறிந்துகொண்டதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல்களை கோருவதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரவி செனவிரட்னவின் மீது கம்மன்பில குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதும் அரசாங்கமும், ஆயர் இல்லமும் அதனை நிராகரித்திருந்தன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam