ஈஸ்டர் அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட அறிவிப்பு

Sri Lanka Bomb Blast Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation
By Dhayani Oct 24, 2024 04:43 PM GMT
Report

ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

ஈஸ்டர் அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட அறிவிப்பு | Ranil S Special Announcement Easter Report

ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கை

“இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன்.

அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.

செனல் 4வில் ஒளிபரப்பப்பட்ட வௌிப்படுத்தல்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கு மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ், டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன ஆகியோர் அடங்கிய மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தேன்.

இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்ல. இந்த குழுக்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஈஸ்டர் அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட அறிவிப்பு | Ranil S Special Announcement Easter Report 

பயங்கரவாத தாக்குதல்கள் 

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் பற்றி ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமைக்கான ஒரு காரணமாகும்.

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருந்ததா? என்று விசாரிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பொறுப்பாகும்.

வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்? அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.

அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை

இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலான அவதானிப்புகளும் மிக முக்கியமானதாகும்.

அந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பே கொலைகளை செய்ததாக முதலாவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தம்பிராச குமார் மற்றும் இராசநாயகம் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அறிக்கையின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது, ​​பல முரண்பாடான விடயங்கள் வெளிவருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அப்போது சிறையில் இருந்த பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்ததாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட அறிவிப்பு | Ranil S Special Announcement Easter Report

புலனாய்வு அமைப்புக்கள் கண்டுபிடிப்பு

வவுணதீவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரின் கணவரால் இந்த கொலைகள் இடம்பெற்றதாக இது தொடர்பான மற்றுமொரு புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹித் ஜமாத்தின் (NTJ) செயற்பாடுகளை புலனாய்வு அமைப்புக்கள் கண்டுபிடிக்க நான்கு மாதங்கள் ஆனதற்கு தேசிய புலனாய்வு அமைப்புகளிடம் தகவல்களைப் பெறுவதற்கான முறையான வலையமைப்பு இல்லாததே காரணம் என இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் (DMI) தெரிவித்துள்ளார்.

"Regarding the gap of four months until discovery of the NTJ, the DMI's explanation was that it was attributable to the lack of network they had at the time to elicit the intelligence. " REPORT OF THE COMMITTEE OF INQUIRY INTO INTELLIGENCE COORDINATION AND INVESTIGATIVE PROCESSES RELATED TO THE EASTER SUNDAY BOMBINGS OF 21ST APRIL 2019 (Page No 12)

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவாக இருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதியில் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாட்டில் கடும் வீழ்ச்சி காணப்படுவதைக் காணமுடிகிறது.

பலமான புலனாய்வு வலையமைப்பு நம்மிடம் இல்லை என்பது ஒரு பயங்கரமான நிலையாகும். ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த விடயத்தில் எனது கவனம் செலுத்தப்பட்டது. ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, சட்டமா அதிபரின் அறிக்கையுடன் புலனாய்வு பிரிவின் வீழ்ச்சி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவர் கொண்ட குழுவின் ஊடாக புலனாய்வு அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிவதற்கும் நான் உத்தேசித்திருந்தேன்.

ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவின் கடுமையான வீழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனது கைக்கு வந்த போதிலும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதால் அந்த அறிக்கைகளை நான் பகிரங்கப்படுத்தவில்லை.

ஈஸ்டர் அறிக்கை தொடர்பில் ரணிலின் விசேட அறிவிப்பு | Ranil S Special Announcement Easter Report

இது தொடர்பில் அறிக்கை கோர வேண்டிய தேவை இருந்தமையால் மேற்படி நடைமுறையை நான் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றேன். என்னைப் பற்றி பேராயர் கூறிய அனைத்து கருத்துக்களும் ஆதாரமற்றவை.

ஈஸ்டர் அறிக்கைகள் குறித்து ஆயர்கள் பேரவை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈஸ்டர் அறிக்கையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறுகம்பை விவகாரத்தில் நடக்கும் இரகசிய கைதுகள்

அறுகம்பை விவகாரத்தில் நடக்கும் இரகசிய கைதுகள்

 

புலனாய்வு தகவலை அடுத்து விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

புலனாய்வு தகவலை அடுத்து விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US