ஐந்து வருடங்களாக போலி நீதிபதியாக செயற்பட்டவர் குஜராத்தில் கைது
பொதுமகன் ஒருவர் தனது சொந்த போலி தீர்ப்பாயத்தில் நீதிபதியாக செயற்பட்டு, 2019 முதல் குஜராத் காந்திநகர் பகுதியில் நிலப்பிணக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய ஒரு மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
ஒரு முறையான நீதிமன்றம் செயற்படுவதாக நம்பவைத்து அவர் பலரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
போலியான நீதிமன்றம்
இந்த விரிவான தந்திரத்தின் பின்னணியில் உள்ள மூளையாக செயற்பட்ட கிறிஸ்டியன், தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்குவதற்காக தனது அலுவலகத்தையே நீதிமன்றமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
உண்மையான நீதிமன்ற அறையை நினைவூட்டும் இந்த போலியான நீதிமன்றம், பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் செயற்பட்டு வந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
