ஞானசார தேரருக்கு ஆதரவாகப் பாதயாத்திரை: வெலிக்கடையில் பலத்த பாதுகாப்பு
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை கொழும்பை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை முன்பாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஞானசார தேரரின் காவி உடைக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமதிப்புக்கும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதயாத்திரை வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக முடிவடையவுள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் பொலிஸார் தண்ணீர் பீரங்கி வாகனங்களையும் அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வெளியிட்ட கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அவரது கருத்துக்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேவேளை, இந்தப் போராட்டம் இனவாதக் கருத்துக்களை ஊக்குவிக்கக்கூடும் என்றும், அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படுவதாகவும் சில தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
போராட்டத்தின்போது வன்முறைகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், போராட்டத்தால் நாட்டின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..