கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்: அநுரவிடம் கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Selvarajah Kajendren
By Thileepan Sep 25, 2024 12:29 AM GMT
Report

நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (24.09.02024) இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“அநுரகுமாரவும், ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்த காலங்களில் முழுமையாக துணை நின்றது.

9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்

9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்

இனப்பிரச்சனை 

ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர். நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம்.

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்: அநுரவிடம் கஜேந்திரன் எம்.பி கோரிக்கை | Gajendran Mp S Request To Anura

நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். நீங்கள் கனவு காண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது. உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக் கொண்டு அந்த விருப்பங்களை அங்கீகரிப்பதன் மூலமாக தமிழர்களை இந்த நாட்டின் ஆட்சியில் பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும்.

சுயநிர்ணய உரிமை

அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று புத்தபிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும்: அநுரவிடம் கஜேந்திரன் எம்.பி கோரிக்கை | Gajendran Mp S Request To Anura

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டு வருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும்.

அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்கவேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம்" எனக் கூறியுள்ளார். 

கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்! நவம்பரில் பொதுத் தேர்தல்

கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்! நவம்பரில் பொதுத் தேர்தல்

லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டுவருகின்ற உளவியல் நடவடிக்கைகள் (psychological-warfare)

லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டுவருகின்ற உளவியல் நடவடிக்கைகள் (psychological-warfare)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US