கடந்த அரசுகளுக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசுக்கும்..! கஜேந்திரகுமார் எம்.பி எச்சரிக்கை

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Nov 05, 2026 10:42 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்க் கிராமங்கள் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அவை இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

மகிந்த, ரணில் ஆட்சிக் காலத்தின் இனவாதப் போக்கினையே தற்போதைய அரசும் கடைப்பிடிக்கின்றது என்றும், தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக இன்று தெற்கில் சிங்கள மக்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(04.11.2026) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பண்ணையாளர்கள் பிரச்சினைக்கான தீர்வு

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்திலிருந்து மொரவெவ பகுதிக்கு, அரச நிறுவனத்தின் அனுமதியுடன் கொண்டுசெல்லப்பட்ட 1200 கால்நடைகள், அந்தப் பகுதியிலுள்ள குடியேற்றவாசிகளால் தாக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் 14 கிலோமீற்றர் தூரம் வரை துரத்தியடிக்கப்பட்டுள்ளன.

முன்னர் தமிழர்க் கிராமமாக இருந்து சிங்களக் குடியேற்றமாக மாறிய மொரவெவ பகுதியில், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது முற்றுமுழுதாக ஒரு இனவாதச் செயற்பாடாகும்.

கடந்த அரசுகளுக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசுக்கும்..! கஜேந்திரகுமார் எம்.பி எச்சரிக்கை | Gajendrakumar S Criticism Of The Anura Government

இதற்கு அரசு என்ன தீர்வை வழங்கப்போகின்றது? மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பிரச்சினைக்கு இதுவரை எந்த அரசும் தீர்வு வழங்காத நிலையில், அந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக இனவாதமாக மாற்றப்பட்டு வருகின்றது.

முந்தைய அரசின் இனவாதிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ, பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளமையுடன், 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனக் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

பயங்கரவாதத்தை கையில் எடுக்கும் அநுர அரசு

அதேபோன்று, சமூக வலைத்தளப் பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசுகளுக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசுக்கும்..! கஜேந்திரகுமார் எம்.பி எச்சரிக்கை | Gajendrakumar S Criticism Of The Anura Government

மகிந்த மற்றும் ரணில் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறைகளே தற்போதும் தொடர்கின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதைவிடவும் பாரதூரமான சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதற்கு எதிராகத் தெற்கில் சிங்கள மக்களே வீதியில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகியுள்ளது. அரசு ஜனநாயகத்துக்கும் மனித உரிமைக்கும் எதிராகத் தொடர்ந்து செயற்பட்டால், கடந்த அரசுகளுக்கு ஏற்பட்ட அதே கதியே இதற்கும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இருதய நோயாளிகளின் உயிர்கள் காக்க செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் மாபெரும் இசை நிகழ்ச்சி MGR 110

இருதய நோயாளிகளின் உயிர்கள் காக்க செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் மாபெரும் இசை நிகழ்ச்சி MGR 110

TIN இலக்கம் தொடர்பில் புதிய அறிவிப்பு - எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்

TIN இலக்கம் தொடர்பில் புதிய அறிவிப்பு - எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்

 


மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US