பாதுகாப்பு பிரதியமைச்சராக முன்னாள் இராணுவ அதிகாரி: தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்குமென கேள்வி
ஊழலை ஒழிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும், நாட்டிலே பாதுகாப்பு பிரதியமைச்சராக இருப்பவர் முன்னாள் இராணுவ அதிகாரியாக உள்ளதால் தமிழ் மக்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவியுள்ளார்.
உபகரணங்கள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் புளியம்பொக்கணை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் 1 மில்லியன் ரூபா பொறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









