சுதந்திர தின கரிநாள் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சைக்குரிய கருத்து..
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல் வாதிகள் மக்களை எப்போதும் ஏமாற்றும் வேலையையே செய்கின்றனர்.அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கமாட்டேன் என நாடாளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்து கொண்டு சுதந்திர தினத்தை எப்படி கரி நாளாக கருத முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
மக்களை ஏமாற்றும் அரசியல்
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் தொடர்பான செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனைத்து சலுகைகளையும் எடுத்துக் கொண்டு அரசியலமைப்புக்கு விரோதமாக எவ்வாறு அவரால் செயற்பட முடியும்.அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
இவை மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் ஆகும்.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பரம்பரையினர் அரசியல் செய்தவர்கள்.அதன் மூலமே அவரும் அரசியல் செய்கிறார்.அவரின் சொத்துக்கள் அனைத்தும் கொழும்பில் வைத்துக் கொண்டு வடக்கில் எப்படி அவருக்கு அரசியல் செய்ய முடியும்.

தையிட்டு விகாரையை உடைக்க செல்லி ஞாயிற்றுக்கிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போராட்டம் செய்கிறார்.எப்படி விகாரையை உடைப்பது.
அன்று விகாரையை கட்டும்போது உதவி செய்தவர்களே இன்று உடைக்க சொல்கின்றனர்.இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலையாகும்.இவ்வாறான தமிழ் அரசியல் வாதிகள் இருக்கும் வரை இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam