கோட்டாபயவை சந்தித்து பேச்சு நடத்திய ஜீ.எல்.பீரிஸ்
சுதந்திர தேசிய சபையில் தலைமை பொறுப்பை வகிக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்தித்து, அவர் சுமார் இரண்டு மணி நேரம் விரிவாக அரசியல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுக்கு கடந்த வாரம் சென்று ஜீ.எல்.பீரிஸ் இந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இதன் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே சுதந்திர தேசிய சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

