13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேசும் உரிமை மீறப்பட்டுள்ளது-ஜீ.எல்.பீரிஸ்
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உரையாற்ற நேரம் வழங்கப்படாமை சம்பந்தமாக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளரிடமும் முறைப்பாடு
13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளருக்கு மாத்திரமல்லாது பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளரிடமும் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி முதல் கடந்த 22 நாட்களாக இந்த நிலைமை தொடர்ந்தும் காணப்படகிறது. 13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேசும் உரிமை முற்றாக மீறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சபாநாயகர் முயற்சித்த போதிலும் வேறு சக்திகள் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது எனவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.