க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவிப்பு (Photos)
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கௌரவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
பணப்பரிசு வழங்கி வைப்பு
கடந்த 2022ஆம் ஆண்டில் ஆறு பாடத்துறைகளில் முதல் 10 இடங்களை பெற்ற 60 மாணவ மாணவியருக்கும், 2021 ஆம் ஆண்டில் ஆறு பாடத்துறைகளில் முதல் ஐந்து இடங்களை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர்களும் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
உயர்தர பரீட்சையில் முதல் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியருக்கு ஐம்பதாயிரம் ரூபா பணப்பரிசும், ஏனைய இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபா பண பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வில் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







