மத்திய கிழக்கு நாடுகளில் சிதைக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் - வெளியான எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் குழந்தைகள் மிக மோசமான விலையைக் கொடுத்து வருவதாக யுனிசெஃப் (UNICEF) துணை நிர்வாக பணிப்பாளர் டெட் சைபன் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் மற்றும் அதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
86 சதவீத பற்றாக்குறை
மேலும் தெரிவித்ததாவது, போர் தொடங்கி 23 நாட்களில், ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் 2,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளனர்.
இது ஒரு நாளைக்கு சராசரியாக 87 குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. லெபனானில் மட்டும் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், இதில் 370,000 பேர் குழந்தைகள்.
மக்கள் பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளால் லெபனானின் 350-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன, இதனால் ஒரு இலட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப் நிறுவனம் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர், உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. இருப்பினும், அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நிதி வசதி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ஐநா கோரியுள்ள 308 மில்லியன் டொலர் நிதியில், 86 சதவீத பற்றாக்குறை நிலவுகிறது. இறுதியாக, உடனடியாகப் போரை நிறுத்துதல், பொதுமக்களையும் பாடசாலைகளையும் பாதுகாத்தல், மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதித்தல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் சர்வதேச சமூகத்தின் முன் வைத்துள்ளார்.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam