இலங்கைக்கு வரும் எண்ணெய்க் கப்பல்கள்! ஈரான் கொடுத்த வாய்ப்பை ஏற்கமுடியாத நிலையில் அரசாங்கம்..

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Iran Nalinda Jayatissa Iran-Israel War
By Benat Mar 24, 2026 10:08 AM GMT
Report

ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த தங்கத்தின் விலை! இலங்கையில் மீண்டும் அதிரடி மாற்றம்

ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த தங்கத்தின் விலை! இலங்கையில் மீண்டும் அதிரடி மாற்றம்

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை..

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் இராஜதந்திர மட்டத்தில் உள்ளன, ஆனால் கடந்த காலத்தில் எங்களால் ரஷ்யாவிலிருந்து எரிபொருள்  பெற முடியவில்லை.  நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நாங்கள் பார்க்க முயற்சிக்கிறோம்.

இலங்கைக்கு வரும் எண்ணெய்க் கப்பல்கள்! ஈரான் கொடுத்த வாய்ப்பை ஏற்கமுடியாத நிலையில் அரசாங்கம்.. | Fuel Prices Increased In Sri Lanka

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை தர உள்ளார். அப்போது இந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்த கருத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.

ஈரானிலிருந்து எரிபொருள் பெறுவதைப் பொறுத்தவரை, தற்போது கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்தத் திறன் இல்லை. ஆனாலும், ஈரானின் அந்த நட்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். 

இலங்கைக்கு வரும் எண்ணெய்க் கப்பல்கள்! ஈரான் கொடுத்த வாய்ப்பை ஏற்கமுடியாத நிலையில் அரசாங்கம்.. | Fuel Prices Increased In Sri Lanka

நாங்கள் இப்போது கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு பல விலை மனுக்களை வழங்கியுள்ளோம். விலை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எனவே, அதனூடாக நாங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வோம் என்று நம்புகின்றோம். 

இந்த விலை மனுக்களின் அடிப்படையில்,  பல எரிபொருள் கப்பல்கள் ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வந்து சேரும். இவற்றைக் கொண்டுதான் எரிபொருள் ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போர் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து இலங்கை பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

போர் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து இலங்கை பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US