ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இடம்பெற்ற இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியை
உலங்கு வானுர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) இறுதிக்கிரியைகள் ஈரானின் தெற்கு கொரசான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.
தெற்கு கொரசான் மாகாண தலைநகரான பிரிஜென்ட் நகரில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு பிரமுகர்கள்
மறைந்த ஜனாதிபதியின் புகைப்படங்களை ஏந்தியவாறு நீண்ட வரிசையில் மக்கள் அணிவகுத்து அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேரணியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிறத்திலான உடையணிந்து துக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோதும் ஈரானில் இடம்பெறும் ஏனைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்கள் எண்ணிக்கையை விட குறைவான மக்களே இதில் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முடாக்கி தலைமையிலான ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களின் தூதுக்குழு உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்கள் இதில் கலந்து கொண்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |