இலங்கை மக்களை ஏமாற்றி பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
ஜா-எல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சிகிச்சையாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு குறித்த பெண் ஏமாற்றியுள்ளார்.
சோயா பொருட்களை பொதி செய்வதற்கு அதிக தொகை தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் வலைவீச்சு
குறித்த பெண்ணுக்கு 59 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
41 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை, சூரியகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும், நுகேகொட நாவல வீதியில் வாடகை அடிப்படையில் பெற்ற வீட்டில் வைத்து இந்த பாரிய மோசடியை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக பிரமிட் திட்டமாக இந்த வியாபாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சோயா பொருட்கள் பொதியிடுவதற்கு உயர்மட்டத்தில் இருப்பவர்கள் ஊடாக அதிக பணம் கிடைக்கும் எனவும் உறுதியளித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பண மோசடி
சோயா பொருட்கள் பொதியிடுவதற்கு பணம் வழங்கப்படும் கூறி வேலையை பெற்றுக் கொண்டதன் பின்னர் பணம் வழங்காமல் ஏமாற்றிவிடுவதாகவும் பின்னர் ஏமாற்றப்பட்ட நபரின் இடத்திற்கு வேறு ஒருவரை விளம்பரம் ஊடாக பணிக்கு வரழைப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஏமாற்றுவதனை தொழிலாக இந்த பெண் செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |