வரலாற்றுச் சிறப்புமிக்க மந்திரிமனையைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு - சீ.வி.கே.சிவஞானம்
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மந்திரிமனையைப் புனரமைப்பதற்காக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய எச்சமாக விளங்குகின்ற மந்திரிமனை புனர்நிர்மாணம் தொடர்பாக தொடர்ச்சியாக விடயங்களை பின்தொடர்ந்து வந்திருக்கின்றோம். மந்திரிமனை புனர்நிரமாணம் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வந்தாலும் அதற்கான சாதகமாக சூழ்நிலை ஏற்படவில்லை.

நிதி ஒதுக்கீடு
இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மந்திரிமனையைப் புனரமைப்பதற்காக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டு திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri