ஹோர்முஸ் நீரிணை மூடல்: எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்..!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை "மூடப்பட்டுவிட்டது" என ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை அறிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 5 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது சிறிய படகில் வந்த ஆயுதமேந்திய நபர்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யேமனின் அல் முக்கல்லா கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த 5வது எண்ணெய் தாங்கிக் கப்பல் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக UKMTO உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து
ஈரானின் அனுமதி பெறாத பாதையில் பயணித்ததாகக் கூறி, 2 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பிரம்மாண்ட சூப்பர் டேங்கர் கப்பல்கள் கடல் கண்ணிகளில் சிக்கி தீப்பற்றியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஹோமுஸ் நீரிணையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய தாக்குதல்களால், சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்